Main Menu

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயற்படுத்த முடியாது – சரத் பொன்சேகா

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது என முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் பேசிய சரத் பொன்சேகா, 18 முதல் 26 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு பயிற்சி அளிக்க 75 பில்லியன் ரூபாய் தேவைப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க போராடும் இளைஞர்களுக்கு இந்த திட்டம் ஊக்கமளிக்கும் என்றாலும், நிதி பற்றாக்குறை மற்றும் தளவாட சிக்கல்கள் திட்டத்தை செயற்படுத்த தடையாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இராணுவப் பயிற்சி அளிக்க இதுபோன்ற நிதியை முதலீடு செய்யும் நிலையில் தற்போதைய அரசாங்கம் இல்லை என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பொய்யான அறிக்கைகள் மூலம் மக்களை திசை திருப்புவதற்கு பதிலாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார்.

பகிரவும்...