Main Menu

மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் சந்­திப்­பொன்றை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நட­வ­டிக்­கை

பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் சந்­திப்­பொன்றை  நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தயா­ரா­கி ­வ­ரு­வ­தாக  கூறப்படுகின்றது.

கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்­திக்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு  நாடாளுமன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு ஒதுக்­கீடு செய்யப்­பட்ட நிதியின் ஊடாக மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்தித் திட்­டங்கள் நிறை­வு­ பெறாமல் காணப்படுவதாக பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர்.

எனவே, குறித்த அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளுக்­கான நிதி ஒதுக்­கீட்டை முழு­மை­யாக வழங்கி, அவற்றை நிறை­வு பெறச்செய்ய வேண்டும் என்­பதில் கூட்ட­மைப்பு அக்கறை  காட்டி வருதாக கூறப்படுகின்றது.

இந்­நி­லை­யி­லேயே நாட்டின் நிதி அமைச்சர் என்ற வகையில் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன்  இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடி உரிய தீர்வை பெறுவதற்கு கூட்டமைப்பு முடி­வெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே நாடாளுமன்றத்தில் புதிய கூட்­டத்­தொடர் ஆரம்­ப­மா­கி­யதும் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷவைச் சந்­திப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை கூட்டமைப்பு மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

பகிரவும்...