Main Menu

மன உணர்வுகளை வெளிப்படுத்தும் முகக்கவசங்கள் வடிவமைப்பு!

கொரோனா வைரஸ் தொற்றின் விளைவாக முகக்கவசம் அணிவது மக்களிடையே அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது.

இந்நிலையில் தற்போது மன உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான முகக்கவசத்தை அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த கணினி விளையாட்டு நிரல் வடிவமைப்பாளரான Tyler Glaiel வடிவமைத்துள்ளார்.

ஒலி உணரிகள், மற்றும் எல்.இ.டி மின்குமிழ்களைக்கொண்டு Arduino தொழிநுட்பத்தின் அடிப்படையில் இந்த முகக்கவசத்தினை அவர் வடிவமைத்துள்ளார்.

சில எழுத்துக்களை உச்சரிக்கும்போது எழும் ஓசைகளின் வேறுபாட்டிற்கேற்ப மிகத்திருத்தமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கட்டமைப்பை உருவாக்க முனைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும்  அது அவ்வளவு வெற்றியளிக்கவில்லை எனக் கூறும் இவர், இந்த முகக்கவச நுட்பத்தினை விற்பனை செய்யும் நோக்கமில்லை என்றும் தெரிவிக்கிறார்.

எவ்வாறாயினும் அவர் தனது ருவிட்டர் தளத்தில் இந்த முகக் கவசத்தை வடிவமைக்கும் படிமுறைகளை தெளிவாக குறிப்பிட்டுள்ளதுடன், “யார் வேண்டுமானாலும் இதனை உருவாக்கிப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...