Main Menu

மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் – தமிழிசை எச்சரிக்கை!

மதக் கலவரங்களில் ஈடுபட முயல்வோர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவர் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்திற்கான வரவு செலவு  கூட்டத் தொடர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின்  உரையுடன் நேற்று ஆரம்பமாகியது. இதன்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “சுமார் 60 ஆண்டுகால நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் தெலங்கானா மாநிலம் உதயமானது. ஆனால் நம் மாநிலம் மிகக் குறுகியகாலத்திலேயே வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்கிறது.

சிலதுறைகளில் நம் மாநிலம் முன்னோடியாகவும் திகழ்கிறது. மின்சாரம், தண்ணீர் பிரச்சினைகளில் இருந்து தெலங்கானா மீண்டெழுந்துள்ளது. 24 மணிநேரமும் விவசாயத்துக்கு தரமான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தனியாக வசிக்கும் பெண்களுக்கும் மாத உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித் தொகை பெறுவதற்கான வயது உச்சவரம்பு விரைவில் 65-லிருந்து 57 ஆகக் குறைக்கப்படும்.

தெலங்கானா மாநிலம், மத நல்லிணக்கத்தின் சின்னமாக திகழ்கிறது. மாநிலத்தில் அமைதி தவழ்கிறது. அதே நேரத்தில்  இங்கு மதக்கலவரத்தில் ஈடுபட முயல்வோர் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். அவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவர்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...