Main Menu

மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்பகுதியில் படகு மூழ்கியதில் குறைந்தது 17பேர் உயிரிழப்பு- 60பேரைக் காணவில்லை!

மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரையில் படகு மூழ்கியதில் குறைந்தது 17 பேர் உயிரிந்தனர் மற்றும் சுமார் 60பேர் காணாமல் போயுள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தின் போது, கப்பலில் இருந்த 130 பயணிகளில் 45 பேர் மீட்கப்பட்டதாக கடல்சார் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவலின்படி, மீட்புப் பணியாளர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

உள்ளூர் தன்னார்வலர்களின் உதவியுடன் மற்றவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் துறைமுக அதிகாரசபைத் தலைவர் ஜீன் எட்மண்ட் ராண்ட்ரியான்டெனைனா தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் ஒரு சரக்குக் கப்பல் என்றும், அது சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்றது என்றும் அவர் மேலும் கூறினார்.

அன்டனன்பேயில் இருந்துவந்த இந்த படகு, அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட துறைமுகத்தில் இருந்து வந்தது அல்ல என்றும் கூறினார்.

ஆபிரிக்காவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள தீவு தேசத்தில் ஜென்டர்ம்கள் குழு ஒன்று அந்த இடத்திற்குச் சென்றது.

அத்துடன், மலகாசி பிரதமர் என்ட்சாய் மற்றும் அரசாங்க பணியாளர்கள் நேரடியாக மீட்பு மற்றும் விசாரணைக்கு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

பகிரவும்...