Main Menu

போராட்டத்தை எடுத்துச்செல்லக் கூடிய ஒரு தலைவராக சம்மந்தனே இருக்கின்றார்; சித்தார்த்தன்

சாத்வீக வழியாகப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தமிழ் மக்கள் போராட்டத்தை எடுத்துச் செல்லக் கூடிய தலைவராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா சம்பந்தனேயுள்ளார். அவர் காலத்தில் தமிழ் மக்களுடைய விடுதலையைக் காணவேண்டும் என  புளட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு அண்மையில் யாழ் வீரசிகம் மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

தமிழ் மக்களுடைய ஒற்றுமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய ஒற்றுமை. தமிழ் கட்சிகளிடையே ஒத்த கருத்து இருக்கக் கூடிய கட்சிகள் அனைத்தையும் ஒன்றுபடுத்தி அந்தக் கட்சிகளுடைய ஒற்றுமையைத் தமிழ் மக்களுடைய பலமாகக் கொண்டு தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தைச் சாத்வீக வழியாகப் பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்த போராட்டத்தை எடுத்துச்செல்லக்   கூடிய ஒரு  தலைவராக எங்களுடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக  சம்மந்தனே இருக்கின்றார். 

அவருக்கு உறுதுணையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாகிய  தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் இருக்கிறார். நான் அறிந்த வகையிலே அனைவரையும் அரவணைத்துச் செல்லும்  கொள்ளையைக் கொண்டவர்.

பல விடயங்களைச்  சமாளித்துக் கொண்டு சென்றுவிடுவார். இப்படியான ஒரு தலைமைத்துவம் இன்று தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்திருக்கின்ற இக் காலகட்டத்திலே தற்போதைய சூழலிலே தமிழ் மக்கள் மிகவும் இக்கட்டான நிலையிலே இருக்கின்றார்கள். 

 மீண்டும் ஒரு சரியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையாகத் தமிழரசுக் கட்சி அதற்கான சரியான முயற்சிகளை எடுத்து தமிழ் மக்களுடைய விடுதலையை வென்றெடுப்பதற்கு முழுமையாக முயற்சியெடுப்பதாக இன்று அறைகூவிக்கொண்டிருக்கிறார்கள் சேனாதிராசாவின் தலைமையின் கீழுள்ளவர்களுடன் நாங்கள் அனைவரும் தமிழ் மக்களுடைய விடுதலையைக் காண்பதற்கு ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டும் என்றார்.

பகிரவும்...