Main Menu

பொரிஸ் ஜோன்சனுடன் நெருக்கமான உறவை பேணவுள்ளதாக ஜேர்மனி அறிவிப்பு!

பிரித்தானியப் பொதுத்தேர்தலில் பாரிய வெற்றி பெற்றுள்ள பொரிஸ் ஜோன்சனுடன் நெருக்கமான உறவை பேணவுள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.

பிரித்தானிய பொதுத்தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கெல் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுடனான உறவினை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பொரிஸ் ஜோன்சனுக்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

650 தொகுதிகளில் கென்சர்வேற்றிவ் கட்சி 365 தொழிற்கட்சி 203, எஸ்.என்.பி 48, லிபரல் ஜனநாயகக் கட்சி 11 மற்றும் டி.யூ.பி 8, சின் ஃபெயின் 7, பிளைட் கம்றி 4, எஸ்.டி.எல்.பி. 1, பசுமைக் கட்சி 1, அலையன்ஸ் கட்சி 1, என வெற்றி பெற்றுள்ளன.

1987 ஆம் ஆண்டுக்கு பின்னர் கென்சர்வேற்றிவ் கட்சிக்குக் கிடைத்த வரலாற்று வெற்றியாக இந்தத் தேர்தல் வெற்றி கருதப்படுகின்றது.

பகிரவும்...