Main Menu

தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம்!

லண்டனின் சில பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியப் பொதுத்தேர்தலில் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான கென்சர்வேற்றிவ் கட்சி பாரிய வெற்றி பெற்றுள்ளது.

இந்தநிலையில் தேர்தல் முடிவை எதிர்த்து லண்டனில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லண்டனில் டவுனிங் வீதியில் திரண்ட போராட்டக்காரர்கள், அங்குள்ள பொரிஸ் ஜோன்சனின் வீட்டில் இருந்து டிராபல்கர் சதுக்கம் வரை பேரணியாக சென்றிருந்தனர்.

இதன்போது போராட்டக்காரர்கள், பொரிஸ் ஜோன்சன் எங்களது பிரதமர் இல்லை, பொரிஸ் ஜோன்சன் பதவி விலக வேண்டும் என முழக்கங்களை எழுப்பியிருந்தனர்.

இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

650 தொகுதிகளில் கென்சர்வேற்றிவ் கட்சி 365 தொழிற்கட்சி 203, எஸ்.என்.பி 48, லிபரல் ஜனநாயகக் கட்சி 11 மற்றும் டி.யூ.பி 8, சின் ஃபெயின் 7, பிளைட் கம்றி 4, எஸ்.டி.எல்.பி. 1, பசுமைக் கட்சி 1, அலையன்ஸ் கட்சி 1, என வெற்றி பெற்றுள்ளன.

1987 ஆம் ஆண்டுக்கு பின்னர் கென்சர்வேற்றிவ் கட்சிக்குக் கிடைத்த வரலாற்று வெற்றியாக இந்தத் தேர்தல் வெற்றி கருதப்படுகின்றது.

பகிரவும்...