Main Menu

பொதுத் தேர்தல் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு வழிவகுக்குமா?

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அச்சுறுத்தல் இன்னும் நாட்டில் தொடர்ந்தால், அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்தக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் தேர்தலை நடத்த முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியிருந்தாலும், இரண்டாவது அலையின் அச்சுறுத்தல் தொடர்ந்தும் நீடிக்கிறது என்றும் கூறினார்.

மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தேர்தலை நடத்தும் நிலையில் நாடு இருக்கிறதா என்பது குறித்து அரசாங்கம் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல கேட்டுக்கொண்டார்.

மேலும் தேர்தலில் வேட்பாளர்கள் பெரும் தொகையை செலவிட வேண்டியிருக்கும், எனவே இதுபோன்ற முடிவுகளை இலகுவாக எடுக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர் சதவீதம் 40% க்கும் குறைவாக இருக்கும் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...