Main Menu

பேரறிவாளனுக்கான விடுப்பு மேலும் 2 வாரம் நீட்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பை மேலும் 2 வாரக் காலம் நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவிற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றை காரம் காட்டி 30 நாட்கள் அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பேரறிவாளனின் விடுப்பு வரும் நவம்பர் 9 ஆம் திகதியோடு முடிவடைகிறது. எனவே மேலும் 30 நாட்கள் விடுப்பை நீட்டிக்கக் கோரி அற்புதம்மாள் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவச் சிகிச்சையைத் தொடர வேண்டியுள்ளது. எனவே விடுப்பு காலத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருத்துவச் சிகிச்சையைக் கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கான விடுப்பை வரும் நவம்பர் 23 ஆம் திகதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.

பகிரவும்...