Main Menu

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் மஹாம் ரூத்யுஞ்ஜய ஹோமம்

வவுனியா- கந்தசுவாமி  ஆலயத்தில் மஹாம்ரூத்யுஞ்ஜய ஹோமம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நாட்டிற்கு ஆசி கோரும் வகையிலும், ஒட்டுமொத்த உலக மக்களையும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்குமாறு ஆசி கோரும் வகையிலும், சகல பௌத்த விஹாரைகளிலும் ரத்தன சூத்திர மந்திர உச்சாடனத்தை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று நாடு முழுவதிலும் உள்ள இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய வணக்கஸ்தலங்களிலும் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறும் பிரதமரினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவுறுத்தலுக்கமைய அனைத்து வணக்கஸ்தலங்களிலும் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில், இன்றையதினம் கந்தசுவாமி ஆலய அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில், மஹாம் ரூத்யுஞ்ஜய ஹோமம் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜோன் ஹென்னடி, சிவஸ்ரீ பிரபாரக்குருக்கள், சுகாரதார பரிசோதகர்கள் மற்றும் அடியார்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பகிரவும்...