Main Menu

அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் போன்றவற்றை திறப்பதற்கு நடவடிக்கை!

மத்திய காலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், கண்காட்சிகள் போன்றவற்றை எதிர்வரும் 10ஆம் திகதிமுதல் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளையும் மத்திய காலசார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் கண்காட்சிகள் போன்றவற்றின் வளாகங்கள், சுற்றுப்புறங்கள் அனைத்தும் சீரான இடைவெளியில் சுத்தப்படுத்த வேண்டும் எனவும், பார்வையாளர்கள் அனைவரும் முககவசம் அணிவது கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பயன்பாட்டுக்கு பின்னரும் சுத்தம் செய்ய முடியாத  தொடுதல் அடிப்படையிலான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்தூக்கி (லிப்ட்) பயன்பாடுகள் குறைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு மட்டுமே இவற்றை பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...