Main Menu

பெப்ரவரில் இந்தோ – பங்களாதேஷ் நட்புறவு குழாய்த்திட்டம் ஆரம்பம்

‘இந்தோ-பங்களா நட்பு குழாய் திட்டம்’ என்று அழைக்கப்படும் 130-கிலோமீற்றர் நீளமுள்ள சர்வதேச எண்ணெய் குழாய்த் திட்டமானது மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு லிமிடெட் மார்க்கெட்டிங் டெர்மினலில் இருந்து பங்காளதேஷ பெற்றோலியம் கோர்ப்பரேஷனின் பர்பதிபூர் தாங்கிக்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் என்றும் இது பெப்ரவரி மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2017ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வங்காள பிரதமர் ஹசீனாவுடனான நடத்திய சந்திப்பின் போது, ஆண்டுக்கு ஒரு மில்லியன் மெற்றிக் தொன் திறன் கொண்ட இந்தக் குழாய்த்திட்டத்திற்கு நிதியளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

செப்டம்பர் 2018இல் நடைபெற்ற குறித்த திட்டத்தின் சம்பிரதாய தொடக்கத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதி கட்டுமானத்திற்கான மொத்த திட்டச் செலவு 377.08 கோடி ரூபா என்று அறிவிக்கப்பட்டது.

இதில் இந்தியாவின் பகுதிக்கு 91.84 கோடி ரூபாவாகவும், மீதமுள்ள  285.24 கோடி ரூபாவை இந்திய அரசாங்கம் மானியமாக அளிக்கவுள்ளது.

பங்காளதேஷிற்கு, இந்தியா புவியியல் அருகாமையில் இருப்பதோடு, மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாகவும் மாறியுள்ளது.

இரு தெற்காசிய நாடுகளுக்கிடையேயான உறவுகள் வளர்ந்து வருவதால், அசாம், திரிபுரா, மிசோரம் மற்றும் மேகாலயா உள்ளிட்ட இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்களின் வர்த்தகம் வளர்ந்து வருகின்றது.

பகிரவும்...