Main Menu

பெண்கள் குறித்த சர்ச்சைக்கருத்து – மன்னிப்பு கோரினார் தலாய் லாமா!

தலாய் லாமாவாக பெண் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் கவரக்கூடியவராக இருக்க வேண்டும் என கூறிய கருத்திற்கு தலாய் லாமா மன்னிப்பு கோரியுள்ளார்.

திபெத்திய புத்த மதத் தலைவராக தலாய் லாமா உள்ளார். இவர் 14-வது புத்த மதத் தலைவராவார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக, 15-வது புத்த மதத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

இந்நிலையில் புதிய தலாய் லாமாவாக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து தலாய் லாமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தலாய் லாமா, ‘பெண் ஒருவர் தலாய் லாமாவாக வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அவ்வாறு பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் கவரக் கூடியவராக இருக்க வேண்டும்.

அவர் அழகாக இல்லாவிட்டால், அவரைக் காண்பதற்கு பெரும்பாலானோர் விருப்பம் கொள்ள மாட்டார்கள்’ எனவும் தலாய் லாமா குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் தலாய் லாமாவின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் வெளியிட்டு வந்தநிலையிலேயே, தலாய் லாமா மன்னிப்பு கோரியுள்ளார்.

தலாய் லாமாவின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

பகிரவும்...