Main Menu

பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை ஏழு வீதம் அதிகரிப்பு!

நாட்டில்  கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக நடந்த குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொருநாளும் சராசரியாக 87 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த காப்பகம்  குறிப்பிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த காப்பகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த  அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “கடந்த 2017இல்  32 ஆயிரத்து 559 பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகி இருந்தன. இதன்பின் 2018இல்  பதிவான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 359 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 30.9 சதவீத வழக்குகள் பெண்ணுக்கு கணவன் அல்லது கணவனின் உறவினர்கள் இழைத்த குற்றங்களால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள்.
கடந்த 2018ல் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களால் மூன்று இலட்சத்து 78 ஆயிரத்து 236 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2019ல் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்குகளின் எண்ணிக்கை நான்கு இலட்சத்து 5 ஆயிரத்து 861 ஆக உயர்ந்தது. இது 2018ஐ  காட்டிலும்   7.3 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் சராசரியாக 87 பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகின. கடந்த 2018ல் ஒரு இலட்சம் பெண்களில் 58.8 சதவீதம் பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் அரங்கேறின. இந்த விகிதம் 2019ல் 62.4 சதவீதமாக உயர்ந்தது.

கடந்த 2018ஐ காட்டிலும் 2019ல் குழந்தைகளுக்கு எதிராக நடந்த குற்ற சம்பவங்களின் விகிதம் 4.5 சதவீதம் உயர்ந்தது. 2019இல் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களால் 1.48 இலட்சம் வழக்குகள் பதிவாகின.

இதில் 46.6 சதவீதம் கடத்தல் வழக்குகள் 35.3 சதவீதம் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் காணப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...