Main Menu

பெங்களூருவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பெங்கரில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், தொழிற்சங்களைச் சேர்ந்தவர்கள் இனைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் போராட்டம் நடந்த இடங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு பலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர் என்றும் இதனால் பெங்களூரு நகரம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.

பகிரவும்...