Main Menu

புத்தகப்பைகளின் எடை குறித்த ஆய்வு முடிவு வெளியானது!

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகள் அவர்களது உடல் எடையில் 10 சதவீதத்துக்கும் மேல் இருக்கக் கூடாது என தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய விஞ்ஞானிகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாக இந்த விடயம் கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து அப்ளைடு எர்கோனாமிக்ஸ் அறிவியல் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில்,

‘பாடசாலை சிறுவர்கள் எடுத்துச் செல்லும் புத்தகப் பைகள் எந்த அளவு எடை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்கான ஆய்வில் லிவர்பூல் ஜான் மூரே பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் இணைந்து ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கிரானடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதற்காக, 49 பாடசாலை மாணவர்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்களிடம் முதுகில் சுமந்து செல்லும் பைகள் மட்டுமன்றி, சக்கரங்களின் உதவியுடன் இழுத்துச் செல்லும் பைகளும் வழங்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

குறித்த மாணவர்களை சுமை இல்லாமல் சாதாரணமாக நடக்கச் சொல்லியும், பிறகு முதுகுப் பைகளை சுமக்கச் செய்தும், அதனைத் தொடர்ந்து இழுவைப் பைகள் கொடுக்கப்பட்டும் அசைவழுத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த சோதனைகளின் நிறைவில், மாணவர்களின் உடல் எடையைப் போல் 10 சதவீதத்துக்கும் மேலான எடை கொண்ட முதுகுப் பைகளையும், 20 சதவீதத்துக்கும் மேலான எடை கொண்ட சக்கர இழுவைப் பைகளையும் அவர்களிடம் தந்தால், அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிய வந்துள்ளது.

முதுகுப் பைகள் இருக்க வேண்டிய எடை குறித்து ஏற்கெனவே இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தாலும், இழுவைப் பைகளைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...