Main Menu

பிரேஸிலில் பொலிஸாரின் கைது நடவடிக்கையால் ஏற்பட்ட விபரீதம்: 9 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்!

பிரேஸிலின் ஸா பாலோ பகுதியில் பொலிஸாரின் கைது நடவடிக்கையின் போது, பொலிஸாருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

விருந்து நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த பொதுமக்கள் அச்சமடைந்து, அலறியடித்து ஓடியதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வேளையில் இருசக்கர வாகனத்தில் சென்ற குற்றவாளிகள் இருவரை துரத்தி சென்ற போது, அந்த பகுதியில் நடைபெற்று கொண்டிருந்த விருந்து நிகழ்ச்சியில் குற்றவாளிகள் புகுந்து விட்டனர்.

சுமார் 5000இற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றிருந்த இந்நிகழ்விற்குள் புகுந்த குற்றவாளிகள் கூட்டத்தில் இருந்தவாறு பொலிஸாரை, நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதன்போது, அச்சத்தினால் சிதறியடித்து ஓடிய பொது மக்களில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

எனினும், இந்த சம்பவத்தின் போது குற்றவாளிகள் மீது பதில் தாக்குதல் நடத்திய பொலிஸார் ரசாயன ஆயுதங்கள் மற்றும் றப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தியதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எமர்சன் மஸ்ஸெரா தெரிவித்துள்ளார்.

பகிரவும்...