Main Menu

பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 330 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் 330 பேர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 26 ஆயிரத்து 960 ஆக அதிகரித்துள்ளது.

41 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 33 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கொரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன. குறிப்பாக கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கரோனா மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றினால் அமுல்படுத்தப்பட்ட முடக்க கட்டுப்பாடுகள் காரணமாக பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் சரிசெய்ய கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...