Main Menu

அடுத்து வரும் தொற்று நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்

அடுத்து வரும் தொற்று நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில், உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“கொரோனா வைரஸ் தொற்று நோய் என்பது உலகின் கடைசி தொற்று நோய் அல்ல. இனி வர உள்ள தொற்று நோய்களுக்கு உலகம் தயாராக இருக்க வேண்டும். தொற்று நோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பொதுசுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இனிவரும் காலங்களில் பொதுசுகாதார நடவடிக்கைக்கு உலக நாடுகள் அதிக முதலீடுகளை செலுத்த வேண்டும்” என கூறினார்.

பகிரவும்...