Main Menu

பிரான்ஸ் : உயிரிழப்புகள் 166ஆக குறைந்தன

கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் ஏற்பட்டு வந்த உயிரிழப்புகள் குறைவடைந்து வருவதில் பிரான்ஸ் கொஞ்சம் பெருமூச்சுவிடத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மருத்துவமனைகளில் 118 பேரும், மூதாளர் இல்லங்களில் 48 பேருமாக 166 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 350 பேர் குணமடைந்துள்ளனர். உச்சநிலையினை அடைந்திருந்த உயிரிழப்புகள் தட்டடையா பல வாரங்கள் நீடித்து வந்த நிலையில் அது கீழ் நோக்கிச் செல்லத் தொடங்கியிருக்கின்றது.

தீவிரசிகிச்சைக் கட்டில்கள் 5000 அளவிலேயே மருத்துமனைகளில் காணப்பட்டிருந்த நிலையில், தற்போது தீவிரசிகிச்சைப் பிரிவில் 3,827 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதும் சற்று ஆறுதலை சுகாதாரத்துறைக்கு கொடுத்திருந்தாலும், 25,827 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர்.

இதுவரை வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 130,979ஆக உயர்ந்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 24,760ஆக உயர்ந்துள்ளது.  50,562 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரசின் முதல் அலையென சொல்லப்படுகின்ற ஏற்பட்ட இந்த நிலை சற்று தணிந்துவந்தாலும், மே11 பொது முடக்க நீக்கத்துக்கு பின்னராக இராண்டாவது அலை ஏற்பட்டுவிடுமா என்ற அச்சம் நீடித்தே வருகின்றது.

பகிரவும்...