Main Menu

பிரான்சில் வெப்ப அலையால் 1,435 பேர் உயிரிழப்பு – சுகாதாரத் துறை

பிரான்சில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வீசிய அனல் காற்றால் 1,435 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் Agnès Buzyn  தெரிவித்துள்ளார்.

பிரென்சு வானொலிக்கு செவ்வியளித்த அமைச்சர் ஆன்யஸ் புசாங், உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று தெரிவித்தார். பிரான்சில் கடந்த ஜுன் மாதத்தில் வரலாறு காணாத வகையில் 46 பாகை செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.

கடந்த கோடை காலத்தில் அங்கு பல முறை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, பாடசாலைகளும் மூடப்பட்டதுடன் பொது நிகழ்ச்சிகள் பல ரத்து செய்யப்பட்டன.

ஏனைய நாடுகளான பிரித்தானியா, பெல்ஜியம், ஜேர்மனி, லக்சர்ம்பெர்க் மற்றும் நெதர்லாந்திலும் இதுவரை இல்லாத அளவில் வெப்பநிலை பதிவானது.

ஆனால், இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளை, பிரான்ஸ் நாட்டை தவிர வேறு எந்த நாடும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...