Main Menu

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி

டெல்லியில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை இன்று வழங்கினார்.

ஜனாதிபதியிடம் விருது பெறும் பிரணாப் முகர்ஜிபுதுடெல்லி:
கடந்த ஜனவரி மாதம் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சமூக செயல்பாட்டாளர் நானாஜி தேஷ்முக் மற்றும் அசாம் பாடகர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இதில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணி ஆற்றியதற்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. 

இவர்களில் நானாஜி தேஷ்முக், புபேன் ஹசாரியா ஆகியோருக்கு, மறைவுக்கு பின் இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பிரபல கல்வியாளர் மதன்மோகன் மாளவியா (மறைவுக்கு பின்) ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளாக இந்த விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. 
பாரத ரத்னா விருதுக்கு அறிவிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து இருந்தார். அதே போல் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரணாப் முகர்ஜிக்கு  பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
மேலும், அசாம் பாடகர் பூபென் ஹசாரிகா சார்பில் அவரது மகன் தேஜ் ஹசாரிக்காவும், நானாஜி தேஷ்முக் சார்பில் தீனதயாள் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் வீரேந்திரஜித் சிங் பாரத ரத்னா விருதை பெற்றுக் கொண்டனர்.
பாரத ரத்னா விருதை பெற்றுக் கொண்ட பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவுக்கு நன்றி தெரிவித்தார். 

பகிரவும்...