Main Menu

பாபர் மசூதி வழக்கு விசாரணை : நாளை தீர்ப்பு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் நாளை (புதன்கிழமை)  தீர்ப்பளிக்கவுள்ளது.

முகலாய பேரரசர் பாபரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மசூதி  1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  6 ஆம் திகதி இடிக்கப்பட்டது.  இதன்போது சட்டத்திற்கு புறம்பான வகையில் மசூதியை இடித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக  பா.ஜ.கவின் வழிகாட்டுதல் குழுவின் முக்கிய தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,  உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்,  முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி உட்பட  32 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு லக்னோவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில்  நீதிபதி எஸ்.கே.யாதவ் முன் விசாரிக்கப்பட்டு வருவதுடன், செப்டம்பர்  மாதத்தின் இரண்டாம் திகதி முதல் தீர்ப்பு எழுதப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையில் நாளை தீர்ப்பளிக்கப்படவுள்ளது.

பகிரவும்...