Main Menu

‘பானி’ புயல் எதிரொலி – சென்னை வந்து செல்லும் 12 விமானங்கள் ரத்து

ஒடிசாவை தாக்கிய பானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஒடிசா மாநிலத்தில் நேற்று கரைகடந்த ‘பானி’ புயல் அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

ஒடிசாவில் கரைகடந்த பானி புயல் வங்காள தேசத்தை நோக்கி சென்றது. மேற்கு வங்காளம் மாநிலத்திலும் பானி புயல் கடும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனவே, மேற்குவங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது தேர்தல் பிரசாரத்தை 48 மணி நேரம் ரத்து செய்துள்ளார். பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. கொல்கத்தா – சென்னை மார்க்கத்தில் 220-க்கும் அதிகமான ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பானி புயல் காரணமாக சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானங்களும், கொல்கத்தாவில் இருந்து சென்னை வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து சென்னை வந்து போகும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் 12 விமானங்கள் ரத்து ஆகி இருக்கின்றன.

பகிரவும்...