Main Menu

பங்களாதேஷில் பாலியல் துஷ் பிரயோகங்களில் ஈடு படுபவர்களுக்கு மரண தண்டனை: புதிய சட்டத்துக்கு ஒப்புதல்!

பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்துக்கு அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சர்கள் கூட்டத்தில், அமைச்சர்கள் ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளனர். இதனிடையே பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை குறிப்பிட்ட நேரத்தில் விரைந்து முடிக்கும்படி பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தியதாக அமைச்சரவை செயலர் அன்வருல் இஸ்லாம் தெரிவித்தார்.

இது குறித்து அந்நாட்டின் சட்ட அமைச்சர் அனிஷுல் ஹூக் கூறுகையில், ‘இந்த சட்ட சட்டமூலத்துக்கு பங்களாதேஷ் அப்துல் ஹமித் ஒப்புதல் அளிப்பார். தற்போது கொவிட்-19 கால சூழ்நிலை காரணமாக நாடாளுமன்றம் கூட முடியாததால் அந்த சட்டமூலம் இன்று சட்டமாகிவிடும். இந்த சட்டமூலம் கண்டிப்பாக பல்வேறு குற்றங்களை கட்டுப்படுத்த உதவும்’ என கூறினார்.

பங்களாதேஷில் பெண்னொருவர் கும்பலால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு துன்புறுத்தப்படும் காணொளி சமுக வலைத்தளத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து கடந்த ஒரு வாரமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

இந்நிலையில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான மரண தண்டனை வழங்கும் வகையிலான பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான அடக்குமுறை தடுப்பு சட்ட சட்டமூலத்துக்கு அமைச்சரவை அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்தது.

பகிரவும்...