Main Menu

பங்களாதேஷில் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம்: உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்வு

பங்களாதேஷில் மசூதிக்கு அருகே இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.

எரிவாயு குழாயில் இருந்து கசிவு ஏற்பட்டதாக தீயணைப்பு சேவை அதிகாரிகள் சந்தேகிக்கும் இந்த வெடிப்பு, நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) இரவு தலைநகர் டாக்காவிற்கு வெளியே நாராயங்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பைதுல் சலாத் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் ஏற்பட்டது.

37இற்கும் மேற்பட்டவர்கள் டாக்காவின் அரசு நடத்தும் சிறப்பு தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களது உடலில் 90 சதவீதம் எரிந்து போயுள்ளதால் அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆகையால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

சமையல் எரிவாயு குழாய் இணைப்பில் கசிவு ஏற்பட்டு, மசூதிக்குள் அந்த வாயு சூழந்திருக்கலாம் எனவும், அதன் காரணமாக மசூதிக்குள் இருந்த குளிரூட்டு சாதனங்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில், தீக்காயங்கள் மற்றும் புகையை சுவாசித்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பகிரவும்...