Main Menu

நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக உலகத் தமிழிசை மாநாடு

நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக உலகத் தமிழிசை மாநாடு தமிழகத்தில் இடம்பெறவுள்ளது.

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் கோ.விசயராகவன் தலைமையில் குறித்த மாநாடு நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முறையாக உலகத் தமிழிசை மாநாட்டில் 50 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அறிஞர்களும் மாணவர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாநாட்டில் தமிழிசைக் கருவிகளைக் காட்சிப்படுத்தல், தமிழிசைப்பாடல்கள், தமிழிசை நடனம் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

தமிழிசையின் தோற்றம், வளர்ச்சி, தமிழிசை மருத்துவம், தமிழிசை நாடகம், தமிழிசைக் கல்வி, தமிழிசைக் கல்வெட்டு, தமிழிசைத் தூண்கள், தமிழிசை சார்ந்த அரசு திட்டங்கள் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆய்வரங்கத்துக்காக வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுரையின் ஆய்வுச் சுருக்கத்தினை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னரும், முழுமையான கட்டுரையினை நவம்பர் 16 திகதிக்கு முன்னரும் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பகிரவும்...