Main Menu

நீண்ட சர்ச்சைகளுக்கு பிறகு சிரியாவில் போர்நிறுத்தம்: துருக்கியும் ரஷ்யாவும் இணக்கம்!

நீண்டதொரு இழுப்பறிக்கு பிறகு சிரியாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த துருக்கியும் ரஷ்யாவும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இட்லிப் மாகாணத்தில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையொன்று நேற்று (வியாழக்கிழமை) ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்றது.

இதில் கலந்துக் கொண்ட துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் இணைந்து கூட்டாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டனர்.

6 மணித்தியாலங்கள் நீடித்த இந்த கூட்டம் குறித்த துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன் கூறுகையில், ‘இன்று நள்ளிரவு முதல் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படும். சிரிய அரசுப் படைகள் ஒருவேளை தாக்குதல் நடத்தினால் துருக்கி அமைதியாக இருக்காது. பதில் தாக்குதல் நடத்தும்’ என கூறினார்.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற சிரிய படைகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷ்யா உதவியுடன் சிரியா இராணுவம், தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்துவருகிறது.

இதற்கிடையில் உள்நாட்டுப் போரில் தொடங்கிய சண்டை, தற்போது துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையேயான சண்டையாக உருவெடுத்துவருகிறது. இந்த நிலையிலேயே இப்பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

பகிரவும்...