ஹோர்முஸில் இருந்து கப்பல்களை வெளியேற்றும் பணிகளில் தடங்கல்கள்
ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்களை வெளியேற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பின் திட்டத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் சென்றுகொண்டிருந்த தைவானைச் சேர்ந்த ‘நுஎநச டுழஎநடல’ என்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று முதல் இந்த வெளியேற்றத் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல், கப்பல்களின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட நாடுகளுடன்,குறிப்பாக ஈரான், ஓமன் மற்றும் அமெரிக்கா ஆலோசனை நடத்தி, கப்பல்களுக்கும் மாலுமிகளுக்கும் மீண்டும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்த பிறகுதான் திட்டத்தை மீண்டும் தொடங்க முடியும் என்று I M O செயலாளர் நாயகம் ஆர்செனியோ டொமிங்கஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திட்டம் தொடங்கப்பட்ட முதல் மூன்றரை நாட்களில் சுமார் 115 கப்பல்களுடன் 2,500 மாலுமிகள் ஹோர்முஸ் நீரிணையிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சுமார் 11,000 மாலுமிகள் மற்றும் 600 கப்பல்களை வெளியேற்றுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
இதன்படி இன்னும் 500-க்கும் மேற்பட்ட கப்பல்கள் வெளியேற வேண்டியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கினால் முழுமையாக முடிக்க சில வாரங்கள் ஆகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையின் போக்குவரத்து அதிகாரத்தை யார் கையாள்வது என்பதில் ஈரான் மற்றும் அமெரிக்க ஆதரவு நாடுகளுக்கிடையே தெளிவற்ற சூழல் நிலவுகிறது.
1968-ம் ஆண்டு அமைக்கப்பட்ட வழக்கமான போக்குவரத்துப் பாதையில் சுமார் 80 வெடிபொருட்கள் உள்ளதாகக் கருதப்படுவதால், அந்தப் பாதையைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, ஈரான் மற்றும் ஓமன் நாட்டு எல்லைகளுக்கு அருகிலுள்ள மாற்றுப் பாதைகளே தற்போது பயன்படுத்தப்படுகின்றன.
இந்தநிலையில், ஈரானின் அனுமதியின்றி அல்லது ஒருங்கிணைப்பின்றி மேற்கொள்ளப்படும் பயணங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், கப்பல் உரிமையாளர்கள் தற்போது தாங்களாகவே அபாயங்களை மதிப்பீடு செய்து பயணத்தைத் தொடர வேண்டும் என்றும் ஐஆழு அறிவுறுத்தியுள்ளது.
