Main Menu

நிஸான் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு இன்ரர்போல் பிடியாணை!

நிஸான் (Nissan) நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார்லோஸ் கோஸ்னை கைது செய்ய இன்ரர்போலினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லெபனான் அரசாங்கத்திடம் இந்த பிடியாணை உத்தரவை இன்ரர்போல் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிதிக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த கார்லோஸ் கோஸ்னக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில் ஜப்பானில் தங்கியிருந்த அவர் தற்போது அங்கிருந்து தப்பியுள்ளார்.

ஜப்பானில் இருந்து துருக்கி வழியாக லெபனானுக்கு கார்லோஸ் கோஸ்ன் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமது நாட்டின் ஊடாக அவர் தப்பிச் சென்ற விவகாரம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது.

பகிரவும்...