Main Menu

நியூஸிலாந்து எரிமலை வெடிப்பு: மேலும் இருவரின் உடல்களை தேடும் பணிகள் தீவிரம்!

நியூஸிலாந்தின் வெள்ளைத்தீவிலுள்ள எரிமலை வெடிப்பில் சிக்கி உயிரிழந்த இருவரின் உடல்களை கண்டெடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பணியில், மீட்பு படையினரும், இராணுவ படையினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வான்வழி உளவு விமானங்கள் மூலமும், தரை மார்க்கமாகவும், இவர்களின் சடலங்களை கண்டெடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் உடல்கள் சாம்பலில் மூடப்பட்டிருக்க கூடுமெனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த எரிமலை வெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக இருக்குமென நம்பப்படுகின்ற நிலையில், இதில் 12இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எட்டுப் பேரைக் காணவில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிககப்பட்டிருந்த நிலையில், நேற்று ஆறு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில் மீதமுள்ள இருவரின் உடல்களை கண்டெடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை, வடகிழக்கு நியூஸிலாந்து கடற்கரையில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ள விரிகாரி வெள்ளை தீவில் இந்த ஏரிமலை வெடிப்பு மதியம் 2:11 மணியளவில் வெடித்தது.

47 சுற்றுலாப்பயணிகள் எரிமலைக்கு அருகாக இருந்த நிலையிலேயே, இந்த எரிமலை குமுற ஆரம்பித்துள்ளது.

பகிரவும்...