Main Menu

நியூஸிலாந்தின் பிரதமராக இரண்டாவது முறையாக ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவியேற்றார்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நியூஸிலாந்தின் பிரதமராக இரண்டாவது முறையாக ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவியேற்றுக்கொண்டார்.

வெலிங்டனில் அரசு மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த ஒரு விழாவின் போது அவரது அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் சூழ அவர் பதவியேற்றுக்கொண்டார்.

கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் நியூஸிலாந்து தொழிலாளர் கட்சிக்கும், நியூஸிலாந்து தேசிய கட்சிக்கும் பிரதான போட்டி நிலவியது.

இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி, மொத்தம் உள்ள 120 இடங்களில் 65 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 40 வயதான ஜசிந்தா ஆர்டன், எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு பிரதமராக நீடிக்கவுள்ளார்.

நியூஸிலாந்தில் கடந்த 1996ஆம் ஆண்டு விகிதாசார தேர்தல் முறை அமுலுக்கு வந்தது. அதன் பிறகு அந்நாட்டில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஒரு கட்சி ஆட்சி அமைக்கின்றமை இதுவே முதல் முறையாகும்.

பகிரவும்...