Main Menu

நியூசிலாந்தில் கொரோனா எதிரொலி: எல்லை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களை பொறுப்பேற்றது இராணுவம்

இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் நியூசிலாந்து நாட்டின் எல்லை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் தேவைப்பட்டால் இராணுவ வளங்களையும் இராணுவத்தினரையும் பயன்படுத்த முடியும் என்று பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார்.

எல்லைக் கட்டுப்பாடுகள் கடுமையான மற்றும் ஒழுக்கமானதாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து மக்களின் நம்பிக்கையையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து அவுஸ்ரேலியா வழியாக நியூசிலாந்து திரும்பிய 2 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெலிங்டனில் இறந்த தமது பெற்றோரைப் பார்ப்பதற்காக அக்லாந்தில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த அவர்களுக்கு இரக்க அடிப்படையில் தனிமைப்படுத்தல் விலக்கு வழங்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் அனைத்து விலக்குகளையும் சுகாதார அமைச்சர் டேவிட் கிளார்க் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...