Main Menu

நிமோனியாவால் உயிரிழக்கும் குழந்தைகள் பட்டியலில் இந்தியா 2 ஆவது இடத்தில்!

நிமோனியாவால் உயிரிழக்கும்  குழந்தைகள் பட்டியலில்  இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது என ஐ.நா தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளதாவது, உலகளவில், நிமோனியாவால் கடந்த ஆண்டு ஐந்து வயதிற்குட்பட்ட 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலான இறப்புகள் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே ஏற்பட்டு உள்ளன. மேலும் வாழ்க்கையின் முதல் மாதத்திற்குள் கிட்டத்தட்ட 153,000 குழந்தைகள் இறந்து உள்ளனர்.

நிமோனியாவால் குழந்தைகள் இறப்புகளில் அதிகம் பாதிக்கப்படுவது ஐந்து நாடுகளே ஆகும். நைஜீரியா (162,000), இந்தியா (127,000), பாகிஸ்தான் (58,000), காங்கோ ஜனநாயக குடியரசு (40,000) மற்றும் எத்தியோப்பியா (32,000).

இந்த ‘மறக்கப்பட்ட தொற்றுநோய்’ இப்போது ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் 15 சதவீத இறப்புகளுக்கு காரணமாக உள்ளது.

நிமோனியாவால் குழந்தைகள் இறப்புகளுக்கும், வறுமைக்கும் இடையிலான வலுவான தொடர்பு மறுக்க முடியாதது. குடிநீருக்கான அணுகல் இல்லாமை, போதிய சுகாதாரப் பாதுகாப்பு இல்லாதது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உட்புற காற்று மாசுபாடு ஆகியவையே நோய் பாதிப்புக்கு முக்கிய காரணங்களாகும்.

நிமோனியா தொடர்பான இறப்புகளில் பாதி காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையது. இந்த மறக்கப்பட்ட தொற்றுநோய் குறித்து எச்சரிக்கை எழுப்பிய யுனிசெஃப் மற்றும் பிற சுகாதார மற்றும் குழந்தைகள் அமைப்புகள் உலகளாவிய நடவடிக்கைக்கான வேண்டுகோளைத் தொடங்கியுள்ளன.

ஜனவரி மாதம் ஸ்பெயினில் நடைபெறும் குழந்தை பருவ நிமோனியா குறித்த உலகளாவிய மன்றத்தில் உலகத் தலைவர்களிடம் எடுத்துரைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...