Main Menu

நிமோனியாக் காய்ச்சலால் 39 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு

நிமோனியாக் காய்ச்சல் காரணமாக கடந்த ஆண்டு மாத்திரம் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதாவது 39 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழந்ததாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

நிமோனியாக் காய்ச்சலைத் தடுக்கமுடியும் என்றும், அது குணப்படுத்தக்கூடிய நோய் என்றும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நிமோனியாக் காய்ச்சலைத் தடுக்க சிறந்த வசதிகள் இருந்தபோதும் குழந்தைகள் அதிகளவில் இறப்பது கவலையளிப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமும், சில குழந்தைப் பாதுகாப்பு அமைப்புகளும் இணைந்து நிமோனியாக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசாங்கங்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

நிமோனியாக் காய்ச்சல் நுரையீரலைத் தாக்கும், அதனால் மூச்சுக்கோளாறு ஏற்பட்டு மரணத்தில் முடியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...