Main Menu

தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் 12 மணியுடன் நிறைவு

நாட்டின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் பிரசார பணிகள் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.

அதன் பின்னர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை அமைதிக்காலம் கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, அந்த காலப்பகுதியில் எந்தவித பிரசாரங்களையும் முன்னெடுக்க முடியாது எனவும் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை மீறி எவராயினும் தேர்தல் பிரசாரங்களையோ அல்லது வேட்பாளர் ஒருவருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளையோ முன்னெடுக்க முடியாது எனவும் அவ்வாறு செயற்பட்டால், அது தண்டணைக்குரிய குற்றம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படும் சகல பாடசாலைகளையும் அதன் கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அந்தந்த பகுதிகளின் கிராம சேவகர்களிடம் கையளிக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், 15ஆம் திகதி நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

பகிரவும்...