Main Menu

நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விளக்கம்

விடுதலைப் புலிகள் அமைப்பினர் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிக் கூறியிருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘இலங்கைக்கான நண்பர்கள் குழு’ புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த மீள் ஸ்தாபன நடவடிக்கைகள் பிரசெல்ஸின் ஸ்டார்ஸ்பேர்க் நகரில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றன.

பிரித்தானிய பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினரான ஜெப்ரி வான் ஓடன் இலங்கைக்கான நண்பர்கள் குழுவின் தலைவராகச் செயற்படும் அதேவேளை, இந்நிகழ்வில் 8 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 11 பேர் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கைக்கான நண்பர்கள் குழுவின் மீள் ஸ்தாபன நிகழ்வில் பங்கேற்ற ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதம், தனது உரையின் போது இலங்கையின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கிக் கூறினார். 

அத்தோடு உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்தும், அதற்குப் பின்னரான நிலைவரங்கள் பற்றியும் பகிர்ந்துகொண்டதுடன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இலங்கை பேணிவரும் நல்லுறவு தொடர்பிலும் எடுத்துக்கூறினார்.

பகிரவும்...