Main Menu

தொழிலாளர்களுக்கு வேதனங்கள் சரியாக வழங்கப்பட வேண்டும்- கிழக்கு இந்துகுருமார் ஒன்றியம்

சுத்திகரிப்புத் தொழிலாளர்கள், ஏனைய தொழிலாளர்களுக்கு வேதனங்கள் சரியாக வழங்கப்பட வேண்டும் என கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத் தலைவர் ஸ்ரீ. க.கு.சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்தார்.

மேலும், கொரோனா வைரஸ் காலத்தில் தொழிலாளர் விடயத்தில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை, கல்முனையில் அமைந்துள்ள அவரது வாசஸ்தலத்தில் தொழிலாளர் தினம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “இன்று எம்மை ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் காலத்தில் உங்களுக்காய் பாடுபடுகின்ற தொழிலாளர்களது நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் ஏனைய தொழிலாளர்களுக்கு வேதனங்கள் சரியாக வழங்கப்பட வேண்டும்.

எமது நாட்டைப் பொறுத்தளவில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டும். வைரஸ் பரவாமல் சுகாதாரத் துறையினரும் ஏனைய துறையினரும் அயராது பாடுபட்டு வருகின்றனர். இதற்கு மக்கள் ஒத்துழைப்புச் செய்யவேண்டும்.

இதனை அரசியல் இலாபத்திற்காகவோ, சுயலாபத்திற்காகவோ திசைதிருப்ப முயற்சிப்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர். எனவே குழப்பவாதிகளிடமிருந்து முதலில் அரசாங்கம் நாட்டைப் பாதுகாக்க வேண்டும்.

அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் மக்களிடையே சென்று அடையாமல் இருப்பதற்கும் இந்த குழப்பவாதிகளே காரணம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...