Main Menu

தொழிநுட்ப முறைகளின் ஊடாக மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் நோயாளர்கள் தமக்கு தேவையான மருந்துகளை நவீன தொழிநுட்ப முறைகளை பயன்படுத்தி மருந்தகங்களுக்கு தெரிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய whatsapp/ viber/ Imo முறைமையின் ஊடாக மருந்தகங்களுக்கு தேவையான மருந்துகள் குறித்து அறிவித்தால் அவற்றை நோயாளர்களின் வீடுகளுக்கே விநியோகிக்கும் வகையிலான பொறி முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவ்வாறு செயற்பட முடியாவிடின் அருகில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவிக்க முடியும் எனவும் அவ்வாறு தகவல் தெரிவித்தால் அவர் குறித்த மருந்தகத்துடன் தொடர்பு கொண்டு மருந்துகளை பெற்றுத்தருவார் என பொலிஸார் தெரிவித்தனர்.

பகிரவும்...