Main Menu

தேர்தலில் நடக்க போகும் மாற்றம்? : கருத்துக்கணிப்பு

பாஜகவிற்கு பெரிதாக சீட் கிடைக்காது. வெற்றிக்கு வாய்ப்பு குறைவு. ஆனால் பாஜக வளர்கிறதா என்று பார்க்க வேண்டும், என்று மூத்த பத்திரிகையாளர் பா. கி தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன. அதில் இப்போது தேர்தல் நடந்தால் தென்னிந்தியாவில் மொத்தமுள்ள 130 மக்களவைத் தொகுதிகளில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி 60 இடங்களையும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக என்டிஏ 38 இடங்களை வெல்லக்கூடும் . ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், அதிமுக, பிஆர்எஸ், ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட மற்ற கட்சிகள் மீதமுள்ள 32 இடங்களில் வெற்றி பெறலாம் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு: திமுக ஆளும் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுகவின் இந்திய கூட்டணி 30 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 5 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றிபெறலாம் என சர்வே கணித்துள்ளது. கட்சி வாரியாக, திமுக 20 இடங்களிலும், அதிமுக மற்றும் பாஜக தலா 4 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், பாமக ஒரு இடத்திலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெறலாம், என்றும் கூறி உள்ளது. இப்படி பல கருத்து கணிப்புகள் பாஜக தமிழ்நாட்டில் வளரும் என்று கூறி வருகின்றன. பேட்டி; இந்த நிலையில், பாஜகவிற்கு பெரிதாக சீட் கிடைக்காது. வெற்றிக்கு வாய்ப்பு குறைவு. ஆனால் பாஜக வளர்கிறதா என்று பார்க்க வேண்டும், என்று மூத்த பத்திரிகையாளர் பா. கி தெரிவித்துள்ளார். ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ஜனவரி மாதம் 2ம் தேதியே மோடி தமிழ்நாடு வந்தார். புத்தாண்டிற்கு பின் அவர் முதல்முறையாக சென்ற ஊர் தமிழ்நாடுதான். இன்னும் அதிகம் அவர் செல்வார். இனி 10 – 15 முறை வந்தாலும் ஆச்சர்யம் இல்லை. தேர்தல் நேரத்தில் அவர் அடிக்கடி செல்வார். அப்படி செல்லலாம். இது தேர்தல் கணக்குதான். அதில் மாற்று கருத்து இல்லை. அவர் கண்டிப்பாக வருவார். கல்பாக்கத்திற்கு அவர் வந்தது அதிகாரபூர்வமான பயணம். அதுவே நந்தனம் வந்தது அரசியல் . அவர் பிரதமர் மட்டும் அல்ல. அவர் அரசியல் தலைவரும் கூட, தேர்தல் நேரத்தில் அவர் அரசியல் ரீதியாகவே பேச வேண்டும். வேறு வழி இல்லை. தேர்தல் நெருங்கிவிட்டது. திமுகவை விமர்சனம் செய்தார் . அதேபோல ஜெயலலிதாவை பாராட்டினார். பாஜக நிர்வாகி சவுதாமணி திடீர் கைது.. சென்னையில் கைது செய்த திருச்சி போலீஸ்.. காரணம் இதுதானாம்! அவர் இன்னும் அட்டாக் செய்வார். இது தேர்தல் கணக்குதான். அதில் மாற்று கருத்து இல்லை. அவர் கண்டிப்பாக வருவார். மோடி தமிழ்நாட்டில் அப்படித்தான் பேசுகிறார். அவர் ராமர் கோவில் பற்றி பேசினார். ஜெயலலிதா, எம்ஜிஆர் பற்றி பேசினார் . மாநில அரசியலில் எது வலுவாக இருக்கிறதோ அதை பேசுவது தேசிய கட்சிகளின் வழக்கம். அதை மோடி செய்கிறார். 1989 தேர்தலில் ராஜிவ் காந்தியும் இப்படி செய்துள்ளார். ராஜிவ் காந்தியும் இப்படி அதிகம் பயணம் செய்துள்ளார்., ராஜிவ் காந்தியை அப்போது கருணாநிதி விமர்சனம் செய்தார். அப்போது தமிழ்நாட்டில் திமுகதான் வென்றது. ராஜிவ் காந்தி வந்து பிரச்சாரம் செய்தும் கூட காங்கிரசுக்கு பெரிதாக சீட் கிடைக்கவில்லை. அதேதான் இப்போதும். பாஜகவிற்கு பெரிதாக சீட் கிடைக்காது. வெற்றிக்கு வாய்ப்பு குறைவு. ஆனால் பாஜக வளர்கிறதா என்று பார்க்க வேண்டும். போன்ற முறை பெற்ற வாக்கு சதவிகிதத்தை அதிகமாக பெற்று இருக்கோமா என்பதை பார்க்க வேண்டும். 1989ல் காங்கிரஸ் தனியாக தோல்வி அடைந்தாலும் அதிக வாக்குகளை பெற்றது. வளர்ந்து இருந்தது. அதேபோல் பாஜக இப்போது வளர்ந்து இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் பா. கி தெரிவித்துள்ளார்.

பகிரவும்...