Main Menu

தேசிய விருது பட்டியல் – புறக்கணிக்கப்பட்ட தமிழ் படங்கள்

66வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் தமிழ் படங்கள் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய விருதுஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 66-வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
அதில் ‘பாரம்’ என்ற தமிழ்ப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மகாநடி’ படத்திற்கு கிடைத்துள்ளது. கேஜிஎப் படத்திற்கு சிறந்த ஆக்‌ஷன் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்டிற்கும் கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்காக மகாநடி படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தமிழில் பாரம் படத்திற்கு மட்டுமே விருது கிடைத்துள்ளது. மற்ற பிரிவுகளில் தமிழ் படங்கள் இடம் பெறாதது சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வருடம், பரியேறும் பெருமாள், சர்வம் தாளமயம், இரும்புத்திரை, ராட்சசன், 96, 2.0, சீதக்காதி, கனா, சூப்பர் டீலக்ஸ், வட சென்னை ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களை அதிக கவர்ந்த படங்கள். மேலும் பல திரைப்பட விழாக்களில் இப்படங்கள் கலந்துக் கொண்டு விருதுகள் பெற்றுள்ளது. 
ஆனால், இந்தப்படங்கள் தேசிய விருது பட்டியலில் இடம் பெறாதது ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்படத் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பகிரவும்...