Main Menu

இயக்குநரும் நடிகருமான மனோபாலா காலமானார்

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் மனோபலா. தமிழில் கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் காமெடி வேடங்களில் நடித்து வரும் இவர் தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டியெடுத்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று அவர் உடல் நலக்குறைவால் காலமானார்

அவர் கடந்த சில நாட்களாக கடுமையான நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு வந்தார். நடிகர் மனோபாலா தமிழ் திரையுலகில் பல முகங்களை கொண்ட நடிகர். இவர் தயாரிப்பாளராக, இயக்குனராக, காமெடி நடிகராக, குணச்சித்திர நடிகராக பல வேடங்களில் நடித்துள்ளார். இவர் இதுவரை 40 படங்களை இயக்கி உள்ளார். 16 தொலைக்காட்சி தொடர்களை இயக்கி இருக்கிறார்.

69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். மனோபாலா இவர் அரண்மனை, டான், துப்பாக்கி, சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிதாமகன் படத்தில் நடித்திருந்த கதாப்பாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இயக்குனர் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குனராக மனோபாலா பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோபாலா ஆகாய கங்கை படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக மனோபாலா அறிமுகமானார். ரஜினி நடித்த ஊர்க்காவலன், பிள்ளை நிலா, சிறைபறவை, மூடு மந்திரம், கருப்பு வெள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை மனோபாலா இயக்கியுள்ளார். சதுரங்க வேட்டை உள்ளிட்ட 3 திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பகிரவும்...