Main Menu

தென் கொரியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

தென் கொரியாவில் 50 பேருக்கும் குறைவானவர்கள் கொரோனா வைரஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது சீனாவிற்கு வெளியே ஆசியாவின் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளான நாட்டில் பெப்ரவரி 29 ற்கு பின்னர் பதிவான மிகவும் குறைந்தளவிலான எண்ணிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) 47 புதிய தொற்றுநோய்யாளிகள் அடையாளம் காணப்பட்டதாகவும் இது ஒரு நாளைக்கு முன்னர் 81 ஆக இருந்தது என்றும் மொத்த எண்ணிக்கை 10,284 ஆக உயர்ந்துள்ளது என்றும் தென் கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸினால் மேலும் 03 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 186 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 135 பேர் வைரஸிலிருந்து மீண்டுள்ளதாகவும் மொத்த எண்ணிக்கை 6,598 ஆக உயர்ந்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியா தற்போது தொற்றுநோயை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது இதனால் சுமார் 100 அல்லது அதற்கும் குறைவான புதிய தினசரி நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால் தினசரி பாதிப்பு விகிதம் 50 ஐ விட குறைந்தது இதுவே முதல் முறை என்றும் அதிகாரிகள் குருதிப்பிட்டுள்ளனர்.

பகிரவும்...