Main Menu

பிரான்ஸில் 357 பேர் உயிரிழப்பு – 250 பேர் சிகிச்சையின் பின் வெளியேறினர்!

பிரான்ஸின் சுகாதாரத் துறை   இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள  அறிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 357 பேர் உயிரிழந்துள்ளதோடு, 250 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 390 பேர் கடந்த 24 மணிநேரத்தில் தீவிரசிகிச்சைப் பிரிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக  6978 பேர் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 5889 பேர் மருத்துமனைகளிலும், 2189 பேர் முதியோர் இல்லங்களிலும் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 8078ஆக பதிவாகியுள்ளது. 28891 பேர் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதோடு, இவர்களில் 748 பேர் கடந்த 24 மணிநேரத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள்.

இதேவேளை கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்பினைச் சந்தித்துள்ள இல்-டு-பிரான்ஸ் பகுதியில் ஏற்படும்  உயிரிழப்புக்கள், நாளை திங்கட்கிழமை முதல் பத்து நாட்களுக்கு உச்சகாலமாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

பகிரவும்...