Main Menu

துருக்கி ஆட்சி கவிழ்ப்பு: சந்தேகத்தின் அடிப்படையில் 181 பேர் கைது!

துருக்கியில் ஜனாதிபதி தயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 181 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீவிர தேடுதல் மற்றும் நீண்ட ஆய்விற்கு பின்னர், இவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) துருக்கி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும், 10 மருத்துவர்கள் உட்பட 18 பேரிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடத்துவதற்காக, அவர்களையும் பொலிஸார், காவலில் அழைத்துச் சென்றனர். இதனை அந்நாட்டு நீதித் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி ஜனாதிபதி தயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கீழ் இறக்கி, இராணுவ ஆட்சியை கொண்டுவர குர்திஸ்தான் தீவிரவாத அமைப்பான பி.கே.கே என்று அறியப்படும் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சியை விட மிக மோசமான தீவிரவாத குழு முயற்சி செய்தது.

எனினும், பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடித்தனர். இதன்போது நாட்டின் விடுதலைக்காக 161 பொதுமக்கள் உயிரிழ்ந்ததோடு, இந்த திட்டத்தை தீட்டிய 20 பேர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இராணுவ புரட்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள், பொலிஸார், அரசு ஊழியர்கள், புரட்சிக்கு உதவிய பொதுமக்கள் என 50,000 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் அரசு ஊழியர்களை துருக்கி அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்த ராணுவ புரட்சி முயற்சிக்கு அமெரிக்காவில் வாழும் மத குரு பெதுல்லா குலன்-தான் சதி செய்துள்ளார் என துருக்கி அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும் அவரை நிபந்தனையின்றி துருக்கி அரசிடம் ஒப்படைக்குமாறும் துருக்கி அரசு கூறி வருகிறது.

பகிரவும்...