Main Menu

துயர் பகிர்வோம்- திரு.நல்லதம்பி இரத்தினசிங்கம்(ஓய்வு பெற்ற அதிபர் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்)

தாயகத்தில் குப்பிழானை பிறப்பிடமாகவும், ஜேர்மனி சார்புருக்கனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. நல்லதம்பி இரத்தினசிங்கம் அவர்கள் 13/12/2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற திருமதி புவனேஸ்வரி இரட்ணசிங்கம் (நீலா ரீச்சர் ஓய்வு நிலை ஆசிரியை , குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்) அவர்களின் அன்பு கணவரும், ஸ்ரீரங்கன்(ரி.ஆர்.ரி தமிழ் ஒலி அறிவிப்பாளர்) பிரான்ஸ், ஸ்ரீரமணன் (பிரான்ஸ்) , ஸ்ரீதாரணி (ஜேர்மனி), ஆகியோரின் பாசமிகு தந்தையும், சாந்தினி (பிரான்ஸ்), இதயராணி (தீபா) பிரான்ஸ், அமரர் சேகர், மத்தியாஸ் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும், அன்பு பேரப்பிள்ளைகள் தர்சினி, சிந்தியா, ஜெனுசாந்த், அமரர். தர்சிகா, யதுர்சிகா, ஆதவன் (பிரான்ஸ்), அபிஷேக், லக்சிகா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு பேரனும் சயானா (பிரான்ஸ்) அவர்களின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை

20 12. 2022 செவ்வாய்க்கிழமை மதியம்12.00 மணி தொடக்கம் 2.00 மணி வரை 

 இடம்:

Friedhof Eppelborn, 

Auf der Hohl, 66571 Eppelborn ,

Germany

தகவல் குடும்பத்தினர்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் அன்னாரின் பிரிவுத் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அறிவொளி இன்று அணைந்ததுவோ?

ஆயிரம் ஆயிரம் உள்ளங்களுக்கு
அறிவொளி ஊட்டிய
அற்புத விளக்கு அணைந்ததுவோ?

செம்மண்ணின் செல்வப் புதல்வனே!
சிம்மக் குரல் நிமிந்த நடை
நேர் கொண்ட பார்வை
காஷியப் பேச்சு மறக்குமா நெஞ்சம்?

கரும்பலகையின் முன் நிமிர்ந்து நின்று
கற்பிக்கும் திறனால்
மாணவர்களின் உள்ளங்களை ஈர்த்த
உத்தம ஆசிரியர் இன்றும் கண்முன்

நீ படிக்கும் வேளை குறும்புக்காரன்
நீ செய்த அட்ட காசங்கள் சொல்ல
கூட்டாளிகள் இன்று இல்லையே!
உங்களுக்கெல்லாம் மகுடியாய் இருந்த
வாத்தியாரும் இல்லையே!
ஏங்குதே மனம்

உற்றார் சுற்றம் உறவைப் பேணி
அற்றாருக்கு உதவும் அற்புத தெய்வமே!
தேசம் விட்டு போனாலும் நம்
செந்தமிழ் வளர்க்க அரும்பாடுபட்ட
அற்புத ஆசிரியர் உன் இதயத்தில்
இணைந்த இனியவள் லீலாவுடன்
கற்பித்து மகிழ்ந்த சுந்தரத் தமிழனே!
மறக்க முடியுமா?

மண்ணுக்காய் பைந்தமிழுக்காய்
மக்களைப் பெற்ற மகாராயனே நீ!
போனதெங்கே? தேடுகின்றோம் காணலையே!
பொல்லாத காலன் சொல்லாமல்
கொண்டு சென்றானோ?

உன் பிரிவால் துயரும்
ஊரும் உறவும் சுற்றமொடும்
கலங்கி நிற்கும் திருமதி தங்கமுத்து தம்பித்துரை (ஆசிரியை)

பகிரவும்...