Main Menu

தலிபான்களுடனான சமாதானம்: அரசாங்க முயற்சிகளை விவாதிக்க ஒன்றுகூடிய 3,200 அதிகாரிகள்!

ஆயிரக்கணக்கான ஆப்கானிய மூத்த அதிகாரிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தலிபான்களுடன் சமாதானம் செய்வதற்கான அரசாங்க முயற்சிகளை விவாதிக்க ஒன்று கூடியுள்ளனர்.

இதற்காக, காபூலில் உள்ள லோயா ஜிர்கா என அழைக்கப்படும் பிரமாண்டமான சட்டசபைக்கு சுமார் 3,200பேர் இன்று (வெள்ளிக்கிழமை) அழைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மிகவும் ஆபத்தானவர்கள் என கூறப்படும் 400 தலிபான் கைதிகளின் விடுதலை குறித்தும் இதன்போது விவாதிக்கப்படவுள்ளது.

கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில், குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு இதுகுறித்து அவர்கள் விவாவதிப்பர்.

அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெற அனுமதிக்கும் அமெரிக்காவிற்கும் தலிபானுக்கும் இடையிலான பெப்ரவரி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, போராளிகளுக்கும் அமெரிக்க ஆதரவுடைய அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கான நிபந்தனையாக 5,000 தலிபான் கைதிகள் ஆப்கானிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.

கொலைகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடத்தல் உள்ளிட்ட மிக மோசமான குற்றங்களுக்கு தண்டனை பெற்றதாக கூறும் சுமார் 400 போராளிகளைத் தவிர மற்ற அனைவரையும் அரசாங்கம் விடுவித்துள்ளது.

பல ஆப்கானியர்கள் சமாதான முயற்சியை தலிபானுடனான 19 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சிறந்த நம்பிக்கையாகக் கருதினாலும், சிலர் போராளிகளின் நல்லிணக்கத்திற்கான உறுதிப்பாட்டைப் பற்றி கவலைப்படுகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா தனது துருப்புக்களை திரும்பப் பெற்ற பிறகு.

பகிரவும்...