Main Menu

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது

தமிழக சட்டசபையின் 2020ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தினதி காலை 10 மணிக்கு கூடுகிறது.

இந்த புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேரவையில் உரை நிகழ்த்தவுள்ளார். இந்தக் கூட்டத்தொடர் வரும் 10ஆம் திகதி நிறைவடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் திகதி முடிக்கப்பட்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஜனவரி 6ஆம் திகதி பதவியேற்கிறார்கள்.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகளுக்குப் பின்னர் தமிழக சட்டப்பேரவை கூடுவதால் அந்த முடிவுகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதங்கள் நடைபெறும்.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதால், பேரவையில் அனல் பறக்கும் விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...