Main Menu

தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும்? – உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை – திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

TNPSC தேர்வுகளில் தமிழ் வழியில் பட்டம் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத இட ஒதுக்கீட்டை அஞ்சல் வழி மூலம் பட்டம் வாங்கியவர்களுக்கு வழங்கக்கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழங்கப்பட்ட சலுகைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக கவலை தெரிவித்தனர்.

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முறைப் டுத்தும் வரை குரூப் -1 தேர்வு நடைமுறைக்கு ஏன் இடைக்கால தடை விதிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

பகிரவும்...